இந்த சின்ன பொண்ணுதான் இன்னிக்கு அதிகமா சம்பாதிக்கும் நடிகை...வெளியான சின்ன வயசு ஃபோட்டோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா அச்சுறுத்தல் ஊரை உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்க, மக்கள் பரிதவித்து வருகின்றனர். எப்போது இதற்கெல்லாம் விடிவு காலம் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கு நிலையில், லாக்டவுன் உள்ளிட்ட பிரச்சனையால் அன்றாட வாழ்க்கை பெரும் சிரமத்துள்ளாகியுள்ளது.

Tapsee Pannu shares an adorable childhood pic in her instagram

24 மணி நேரமும் வீட்டிலேயே தொடர்ந்து சில மாதங்கள் இருந்து வரும் நிலையில் பலருக்கு மகிழ்ச்சியை அளிப்பது பொழுதுபோக்கு அம்சங்களான தொலைக்காட்சி, இணையம், மொபைல்ஃபோன் மற்றும் ஓடிடி தளங்கள்தான். இந்நிலையில் நடிகை டாப்ஸி நடித்த 'தப்பட்’என்ற ஹிந்திப் படம் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகி பலதரப்பட்ட ரசிகர்களால் பாராட்டுக்களைப் பெற்றது.

தற்போது டாப்ஸி தனது சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரலானது. அதற்கு கேப்ஷனாக அவர் குறிப்பிட்டது - எப்பவும் எனக்குப் பிடிச்ச அதே போஸ்தான் குடுத்திருக்கேன். அம்மா மடியில என் தம்பி பரிதாபமா உட்கார்ந்திருக்கான். என்னை ஏன் ஃபோட்டோ எடுக்கறீங்க அப்படிங்கற மாதிரி இருக்கு அவன் முகம்.

என் அம்மாவோட மைண்ட் வாய்சில என்ன இருந்திருக்கும்னா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சு ஒரு ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்க வைச்சதுக்கு அவங்களுக்கு ஒரு அவார்ட்டே கொடுக்கணும்னு நினைச்சிருப்பாங்க என்று அழகான கமெண்ட் போட்டுள்ளார்.

அவரது ரசிகர்கள் சின்ன வயதிலும் டாப்ஸி மிக அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்

 

தொடர்புடைய இணைப்புகள்

Tapsee Pannu shares an adorable childhood pic in her instagram

People looking for online information on Lockdown, Netflix, Tapsee pannu, Thappad will find this news story useful.