பிக்பாஸ் நடிகையை 'ஆண்டி' என்று சீண்டி பார்த்த நெட்டிசன்... அடுத்து நடந்த வேற லெவல் 'சீன்'..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே மீண்டும் பிரபலம் அடைந்தவர் நடிகை ஷெரின். இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார். அதனைப் பார்த்த ஒருவர் " நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போது ஆண்டி மாதிரி இருந்தீர்கள். இப்போது நாளுக்கு நாள் இளமையாகி கொண்டே போகிறீர்கள்" என்று கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்த அவர் "ஆம் ஒருவரது மனம் நோகும்படி அவரது உடலை வைத்து அனுமானம் செய்து பேசும் உங்களைப் போன்றவர்களைப் பார்த்தால், சுய அன்பு மற்றும் சுய மதிப்பிடுதல் ஆகியவற்றை உலகில் வலுமைப்படுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது" என்று அதிரடியாக பதில் கூறியுள்ளார்.