கொரோனா ஊரடங்கு : வைரலாகும் 'மாஸ்டர்' நடிகரின் வீடியோ... பெற்றோருக்கு உதவியாக மாடு மேய்கிறேன்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபலங்கள் பலரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல காமெடியானான தீனா தனது வீட்டில் மாடு மேய்க்கும் வீடியோவை தற்போது பதிவிட்டுள்ளார். இவர் கடைசியாக நடிகர் கார்த்தி உடன் 'கைதி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது தளபதி விஜய் உடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் "வீட்டில் வேலைப் பார்த்து எத்தனை நாள் ஆகிறது" என்று தலைப்பிட்டு அவர் இந்த வீடீயோவை வெளியிட்டுள்ளார்.