பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு..! விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா ஆள் கடத்தல் வழக்கில் எந்த நேரத்திலும் தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Bigg Boss Vanitha vijayakumar arrest by police kidnap Case

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜோதவி என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் வனிதா ஆனந்தராஜ் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்தனர். இவர்களது மகள் ஜோவிதா, தனது தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறார்

இந்த சூழலில் மகள் ஜோவிதாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சூழலில் நடிகை வனிதா தற்போது தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் 'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதற்காக அவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் உள்ளார்.

இதுதொடர்பாக நசரத்பேட்டை காவல் நிலையாத்தை தொடப்புக்கொண்டபோது 

அவரை கைது செய்ய உதவுமாறு நசரத்பேட்டை போலீசாரிடம் தெலங்கானா போலீசார் உதவியை கோரியுள்ளதாகவும் . விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் . இதுகுறித்து ஆனந்தராஜ் கூறியதாவது : பள்ளிக்கு சென்ற எனது மகளை கடத்தி சென்று விட்டார். தற்போது வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு இருப்பதால் அங்கு சென்று அவரிடம் விசாரணை செய்யவும் அதற்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றால் வனிதாவை கைது செய்து விசாரிக்கவும் நசரத்பேட்டை போலீசாரின் உதவியை கேட்டு வந்துள்ளதாகவும் எனவே இது சம்பந்தமாக இன்று  (புதன்கிழமை) காலை மீண்டும் போலீஸ் நிலையம் வருமாறும் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என்று கூறினார். இதனால் பிக்பாஸ் வீடு இருக்கும் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.