www.garudabazaar.com

'உங்க யார் மனசுலயாவது இடம் புடிச்சிருந்தா'.. ராஜூவா இப்படி உருக்கமா பேசுறாரு! BiggBoss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியானது தற்போது, அதன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது.

i will happy if i got place in your heart BiggBossTamil5

கோல்டன் மைக் கடிதம்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது கோல்டன் மைக் கடிதம் என்கிற புதிய ஒரு டாஸ்க் போட்டியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு டாஸ்கிற்கு ஒரு ரூல் புக் அறிவிக்கப்படும், அதை போலவே இந்த டாஸ்கிற்கும் இந்த டாஸ்க் குறித்த விதிமுறைகள் வழங்கப்பட்டன. அத்துடன் இந்த டாஸ்க், இந்த இறுதி போட்டிகள் நெருங்கும் நேரத்தில் எவ்வளவு முக்கியமானது என்றும் அதில் விளக்கப் பட்டிருந்தது.

மிக முக்கியமான வாரம்

i will happy if i got place in your heart BiggBoss

அதன்படி, “இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக யாரை தேர்ந்தெடுக்கப் போவது என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கப்போகும் மிக முக்கியமான வாரம் இது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கோல்டன் மைக்கின் மூலம் நீங்கள் கடைசியாக ஒரு முறை மக்களிடம் பேசலாம்” என இந்த டாஸ்க் குறித்து போட்டியாளர்களிடம் விளக்கம் கூறப்பட்டது.

உங்க யார் மனசுலயாவது இடம் புடிச்சிருந்தா

இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜூ, “நடிக்க வருகிற எல்லோருக்கும் ஃபேமஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தியதால்தான் இது எனக்கு ஒரு வாழ்க்கையாக மாறப்போகிறது என நம்புகிறேன். மத்தவங்க சிரித்தால், அதாவது சந்தோஷமா இருந்தால் அதுல எனக்கு ஒரு ஜாலி இருக்கு. அந்த மாதிரிதான் இந்த வீட்டுல நான் இருந்தேன் என நினைக்கிறேன்.

i will happy if i got place in your heart BiggBoss

இப்படி ஒரு தம்பி, இப்படி ஒரு பையன், நம்ம வீட்ல இருந்து இருந்தா நல்லா இருக்கும். இப்படி ஒரு தம்பி, இப்படி ஒரு அண்ணன் உங்க யார் மனசுலயாவது இடம் புடிச்சிருந்தா அதுவே எனக்கு ஒரு பெரிய சந்தோஷம்!” எனக் கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

i will happy if i got place in your heart BiggBossTamil5

People looking for online information on Biggboss 5 tamil, BiggBoss5, BiggBossTamil5, Vijay tv will find this news story useful.