"ஆண்கள் பெண்களை அடிமை படுத்துறீங்க" -பொங்கிய மதுமிதா! ப்ரோமோ வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 14, 2019 10:25 AM
பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரியின் வைல்ட்கார்ட் வரவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் திடீரென வனிதா உள்ளே அனுப்பி வைக்கப்பட்டார்.

வனிதா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யும் வகையில் முதலில் அபிராமியை தூண்டிவிட்டு முகின் உடன் பிரச்சனை செய்ய வைத்தார். இந்த பிரச்சனையை ஒரு வகையில் இருவருக்கும் பாதகம் இன்றி நன்மையில் முடிந்தது. ஒருதலை காதலில் சிக்கி இருந்த அபிராமி அதிலிருந்து மீண்டு வந்து வந்தது உண்மையில் வனிதா செய்த பெரிய உதவி ஆகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் அபிராமியை அடுத்து மதுமிதாவை வனிதா தூண்டிவிட்டு விட்டிருக்கின்றார் என்பது இன்றைய முதல் ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக ஆண்களை குறிவைத்த மதுமிதா , ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், ஆண்கள் பெண்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு கவின், சாண்டி, தர்ஷன் ஆகியோர் மறுப்பு தெரிவித்து சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் மதுமிதாவின் கோபம் சிறிது கூட குறையவில்லை
மேடம் வனிதா சொன்னது போல் இந்த வீட்டின் கதவுகள் 10 நிமிடம் திறந்தால் முதல் ஆளாக நான் வெளியேறி விடுவேன் என்றும், ஆண்கள் அடிமைப்படுத்தும் இந்த வீட்டில் தான் இருக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போலவே இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆரம்பம் முதல் எந்தவித புரிதலும் இன்றி கருத்துக்களை தெரிவித்து வரும் மதுமிதா விரைவில் வெளியேற்றப்படுவார் என்பதற்கான அறிகுறி தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது
#Day52 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FP48ZmEk1s
— Vijay Television (@vijaytelevision) August 14, 2019
"ஆண்கள் பெண்களை அடிமை படுத்துறீங்க" -பொங்கிய மதுமிதா! ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ