பிக் பாஸ் மதுமிதா மீது போலீஸ் புகார்? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 21, 2019 02:56 PM
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுப்பதாக சேனல் நிர்வாகம் போலீஸில் புகார் அளித்ததாகவும், தனக்கு இது பற்றி தெரியாது என்று மதுமிதாவும் கூறிய நிலையில், இது பொய்யான தகவல் என கூறப்படுகிறது.

பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஜூன்.23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக மதுமிதா கலந்துக் கொண்டார். டாஸ்கின் போது ஏற்பட்ட விவாதத்தில் உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா, தன்னை தானே துன்புறுத்திக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, பிக் பாஸ் வீட்டின் ரூல்ஸை மீறிய காரணத்திற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு மதுமிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், சேனல் நிர்வாகம் பேசிய பணத்தை இரண்டு நாட்களுக்குள் திருப்பி தராவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டுவதாக காவல் நிலையத்தில் அவர் மீது சேனல் நிர்வாகம் புகார் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இது குறித்து இருதரப்பினரிடையே பேசிய போது, "சேனல் தரப்பில் இருந்தோ, காவல் துறை சார்பாகவோ தனக்கு எவ்வித அறிவிப்பும், தகவலும் இல்லை" என மதுமிதா கூறினார். அதேபோல், "மதுமிதா மீது எந்த புகார் அளிக்கப்படவில்லை" என சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், மதுமிதா மீது சேனல் நிர்வாகம் புகார் அளித்ததாக பரவிய செய்தி புரளி என தெரிகிறது.