உதயநிதி-மிஷ்கினின் 'சைக்கோ'-க்காக இசைஞானி இசையில் பாடிய Sensational சிங்கர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 14, 2019 09:32 PM
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘சைக்கோ’ திரைப்படத்தின் இறுதிப்பாடலுக்கான ரெக்கார்டிங் நிறைவடைந்தது.
![Mastero Ilayaraja records his last song sung by Sid Sreeram for Mysskin Psycho Mastero Ilayaraja records his last song sung by Sid Sreeram for Mysskin Psycho](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/mastero-ilayaraja-records-his-last-song-sung-by-sid-sreeram-for-mysskin-psycho-news-1.jpg)
‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘சைக்கோ’ திரைப்படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் ஹிதாரி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், இயக்குநர் ராம் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். டபுள் மீனிங் ப்ரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இளையராஜா இசையில் இறுதிப்பாடல் ஒன்று ரெக்கார்டிங் செய்யப்பட்டது. இது குறித்து பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இளையராஜா இசையில் பிரபல பின்னணி பாடகர், லேட்டஸ்ட் ஹார்ட்த்ரோப் சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியிருப்பதாக தெரிவித்துள்ளார். மிஷ்கினும், இளையராஜாவும் ‘சைக்கோ’ படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளதாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
Mastero Illayarajaa recorded his final song.for #physco
This song Was sung by the latest heart throb for his way of singing - sid Sreeram.
Director miskin and Ilayaraja all set to take #psycho into anew zone. pic.twitter.com/lt1xQXT9rv
— pcsreeram (@pcsreeram) July 14, 2019