''சாண்டி தான் உண்மையான வில்லன்'' - பிரபல நடிகை ஓபன் டாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனையினால் பிக்பாஸ் வீடு பரபரப்பாகிக்கொண்டே இருக்கிறது.

Kasthuri speaks about Sandy and Kamal Haasan's Bigg Boss 3

கவின், லாஸ்லியா, சாக்ஷி இடையேயான முக்கோண காதல் ஒரு புறம், மீரா மிதுனின் அட்ராசிட்டி ஒரு புறம் என பிரச்சனைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. மேலும் போன வாரம் சேரன் - சரவணன் மோதல், இந்த வாரம் அபிராமி முகேனுடன் எழுந்த பிரச்சனை என சரவெடியாக வெடிக்கிறது.

நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை என அவர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''சாண்டி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை. சாண்டிய பாஸிட்டிவ்- ஆ மட்டுமே காட்டுறாங்க. கமல் சார் கூட சாண்டிக்கு தான் முக்கியத்துவம் தராரு. லாஸ்லியா கூட ஒரு தடவை சொன்னாங்க. சாண்டி எல்லோத்தையும் சிரிச்சுட்டே சொல்றாரு.

சிரிக்காம சொன்னா அவர் தான் உண்மையான வில்லன் என்று. ஒவ்வொரு வாரமும் ஸ்கெட்ச் போட்றாரு. யார நாமினேட் பண்ணனும்னு சொல்லிக்கொடுக்கிறாரு'' என்று பேசினார்.

''சாண்டி தான் உண்மையான வில்லன்'' - பிரபல நடிகை ஓபன் டாக் வீடியோ