‘தமிழ் பொண்ணு.. அப்போ ஏன் குழந்தைய..?’ - இமிட்டேஷன் டாஸ்கில் Girls-ஐ வச்சு செஞ்ச பிக் பாஸ் பாய்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 todays Promo is out - Kavin, Mughen in female attires and trolls Abhirami Vanitha Madhumita

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படவிருக்கிறார்.

இந்நிலையில், இன்றைஅய் நிகழ்ச்சிக்கான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்கள் நடந்துக் கொண்ட செயல்களை ஆண் போட்டியாளர்கள் இமிடேட் செய்ய பெண்கள் அதனை பார்த்து சிரிக்கின்றனர்.

‘நான் தமிழ் பொண்ணு’ என மதுமிதா கூறியதை மோகன் வைத்தியா முகெனிடம் சொல்கிறார். அதற்கு லேடி கெட்டப்பில் இருக்கும் தர்ஷன் அப்படினா ஏன் குழந்தைய கிள்ளின என பேச, கவின் அவர் ஒரு டிராக்கில் கூச்சலிட்டு கத்துகிறார். குறிப்பாக அபிராமி, மீரா, வனிதா, மதுமிதா ஆகியோரை பிக் பாஸ் 3 பாய்ஸ் அப்படியே இமிடேட் செய்து அவர்களையே அசர வைத்தனர்.

‘தமிழ் பொண்ணு.. அப்போ ஏன் குழந்தைய..?’ - இமிட்டேஷன் டாஸ்கில் GIRLS-ஐ வச்சு செஞ்ச பிக் பாஸ் பாய்ஸ் வீடியோ