வைபவ் ஹீரோவாக நடித்து வரும் படம் 'சிக்ஸர்'. இந்த படத்தை சச்சி இயக்குறார். இந்த படத்தில் சதிஷ், ராதாரவி, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை வால்மேட் எண்டர்டெயின்மென்ட் சார்பாக தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''இது அனிருத்தின் சிக்ஸர். முதல் முறையாக அனிருத்துடன் இணைகிறேன். உங்கள் குரலை பயன்படுத்தியதற்கு நன்றி பிரதர்''. வைபவ் நடிக்கும் பாபாபிளாக்ஷீப் என்ற பாடல் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார்.
It’s a #sixer shot by our @anirudhofficial . Collaborating for the first time & enjoyed every bit. Thanks for lending your voice brother . A rappish quirky EDM song 🎧#BabaBlacksheep 🐏 from @actor_vaibhav starring #Sixer coming soon 🤞🏼 pic.twitter.com/TFCWx5XFTi
— Ghibran (@GhibranOfficial) July 5, 2019