பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்ட பிரபல நடிகர் பொன்னம்பலம், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 போட்டியின் Finalist-ஆக யாருக்கு வாய்ப்பு இருக்கு என்பது பற்றி பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

நடிகர் பொன்னம்பலம் Behindwoods-ன் Second Show வித் நிக்கி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிக் பாஸ் குறித்தும், தற்போதைய போட்டியாளர்கள் குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், ‘செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா உலக விஷயங்கள் பற்றி அறிந்தவர். அவருக்கு இருக்கும் அனுபவம் அவரை இந்த வீட்டில் கடைசி வரை நிலைக்க வைக்கும்.’.
‘சேரன் லொஸ்லியாவை நாமினேட் செய்தது அனைவருக்கும் கேள்வியாக இருக்கும். ஆனால், இந்த நமினேஷன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இலங்கை மக்கள் லொஸ்லியாவுக்கு பேராதரவ தரப்போறாங்கன்னு பாருங்க. கண்டிப்பா Finals-ல் லொஸ்லியா இடம்பெறுவார்’ என்றார்.
‘இந்நிகழ்ச்சியில் கடைசியாக வந்த மீரா மிதுன் Fake-ஆக இருக்கிறார். அவரது செயல்பாடுகள் ஒன் வே டிராபிக் மாதிரி இருக்கு.1-2 வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் இருக்கலாம். கத்தி பேனினா விளம்பரம் கிடைக்கும் என்ற நோக்கில் நடந்துக் கொள்கிறார்கள். இன்னும் 4 வாரங்கள் போனால் தான் யார் நடிக்கிறா? யார் உண்மையா இருக்கா? என்பது தெரியவரும் ’ என்றார்.
பிக் பாஸ் 3 FINALIST லொஸ்லியா தான்! - அடித்து சொல்லும் பிக் பாஸ் பிரபலம் வீடியோ