பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுவருகிறது. போட்டியாளர்களுக்கு இடையே சிறு சிறு சண்டைகளால் தற்போது தான் பிக்பாஸ் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

வனிதா மீது அவரது இரண்டாவது கணவர் குழந்தையை கடத்தியதாக புகார் அளித்துள்ளதால் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வனிதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் டிவி புதிய புரோமோவை வெளியிட்டுள்ளது. மதுமிதா, வனிதா, இடையே கடுமையான வாக்குவாதம் நிகழ்கிறது. அருகே லொஸ்லியோ சோகமாக அமர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் எழுந்து வேகமாக செல்கிறார்.
அதற்கு வனிதா, 'அவ சம்மந்தமே இல்லாம ரியாக்ட் பண்ணிட்டு இருக்கா. அவள விடு' என்கிறார்.
‘சம்மந்தமே இல்லாம REACT பண்ணிட்டு இருக்கா..’ - லொஸ்லியாவை கண் கலங்க வைத்த வனிதா வீடியோ