legend others

‘தூய்மையற்றவள், வெறுப்பு..’ இத்தனையும் தாண்டி அமலாபாலின் ஆடை ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’ திரைப்படம் நிதி பிரச்சனை காரணமாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, பிரச்சனைகள் தீர்ந்து திரையரங்குகளில் ரிலீசானது.

After facing all the curse words, slut shaming, misagony, KDM issues - Amala paul's Aadai released

‘மேயாத மான்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள திரைப்படம் ‘ஆடை’. வி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் அமலா பால் லீட் ரோலில் காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் காலை காட்சி, பத்திரிகையாளர் சிறப்புக் காட்சிகள் நிதி பிரச்சனை காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, நிதி பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இப்படத்தின் மாலை 6 மணி காட்சி ரிலீசானது. இதனை நடிகை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘உலகம் முழுவதும் மாலை 6 மணிக்கு ஆடை ரிலீசாகிறது. காத்திருந்ததற்கு இப்படம் தகும் என உறுதியளிக்கிறோம். தொடர்ச்சியாக நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி’ என தெரிவித்திருந்தார்.

மேலும், இத்துடன் அவர் பகிர்ந்திருந்த புகைப்படத்தில், ‘பல சாப சொற்கள், தூய்மையற்றவள் பட்டம், எனது கேரக்டரை கெடுத்து, தவறான கருத்துகளை பரப்பி, KDM பிரச்சனை உட்பட அனைத்தையும் கடந்தௌ, உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.