"எங்கப்பாவ கோர்ட்டுல பொய் சொல்ல சொன்னாங்க.. ஆனா" - நடிகை ராதிகா, எம்.ஆர்.ராதா பற்றி உருக்கம் ..!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் நடிகை ராதிகா ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் தனது தந்தை பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை கூறியுள்ளார். அவர் "எங்கள் குடும்பத்தின் ராக்ஸ்டார் என் தந்தை தான். தான் சமீபத்தில் எங்கள் அப்பாவின் வழக்கறிங்ஞர் ஒருவர் எழுதிய அறிக்கையை படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு காரியம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. வழக்கறிஞர்கள் சிலர் என் அப்பாவிடம் நீங்கள் ரிலீஸாவதற்கு ஒரு பொய்யை(white lie ) சொல்ல வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள், உடனே என் தந்தை 'நான் வாழ்நாள் முழுவதும் செய்யாத ஒன்றை, இப்போது ஏன் செய்ய சொல்கிறீர்கள். என்ன நடக்குதோ நடக்கட்டும்" என்று கூறியுள்ளார். வாழ்க்கை முழுவதும் சிறந்த நெறிகளோடு வாழ்ந்தவர் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டாம்" என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

அதை இப்போது சொல்வதற்கு காரணம் என்று நீங்கள் கேட்டால், நேற்று நடிகர் எம்.ஆர்.ராதாவின் பிறந்த நாள். அதனால் தான் ராதிகா யாருக்கும் தெரியாத இந்த இந்த ரகசியத்தை தற்போது கூறியுள்ளார். தமிழில் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், பெற்றால் தான் பிள்ளையா, ரத்தக்கண்ணீர், போன்ற என் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகர் எம் ஆர் ராதா. இவரை 'நடிகவேள்' எம்ஆர் ராதா என்று தமிழ் சினிமா முன்னிறுத்துகிறது. இவருக்கு இந்த பெயரை வைத்தவர் பெரியார் தான். நாடகங்களில் நடித்த போதே இவரது நடிப்புத் திறமையை பார்த்து இந்த பெயரை வைத்தாராம். 1930 முதல் 1970 வரை தமிழ் சினிமாவில் இருந்து பின்பு தந்து தாய்வீடான நாடகத் துறைக்கே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
A rock star’s birthday #mrradha , lived life withprinciples, was reading a lawyers report where they requested him 2 tell a white lie in court, & he laughed &said please don’t ask me 2 do something I hav not done my whole life, whatever happens it is ok. Wow some conviction 🙏 pic.twitter.com/nmp4NscWVb
— Radikaa Sarathkumar (@realradikaa) April 14, 2020