‘எவ்ளோ தைரியம் இருந்தா செருப்பால அடிப்பேன்னு..?’- சீறும் பிக் பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் நடிகர் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Kajal Pasupathi and Mamathi Chari shares their bigg boss experience with Behindwoods

இந்த சீசன் 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கியது. இந்த வாரம் முதல் எலிமினேஷன் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே நாமினேட் செய்யப்பட்டுள்ள ஃபாத்திமா பாபு, மீரா, மதுமிதா, கவின், சேரன், சாக்ஷி அகர்வால், சரவணன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் 3 குறித்து முதல் சீசனில் கலந்துக் கொண்ட காஜலும், இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்ட மமதி சாரியும் Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.

அதில், தொடர்ச்சியாக இந்த சீசனை பார்த்து வரும் காஜல்,  ‘பிக் பாஸ் வீட்டில் திட்டமிட்டே மதுமிதாவும், மீராவும் டார்கெட் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், அபிராமி நாமினேட் ஆவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நாமினேட் ஆகாதது அதிர்ச்சியளித்தது. அபிராமிக்கு எப்படி அவங்க விருப்பத்தை சொல்ல உரிமை இருக்கோ அதேபோல் மதுமிதாவுக்கும் அபி பேசியது பிடிக்கவில்லை என கூற உரிமை இருக்கு’.

‘ஆனால், அதுக்காக தொடர்ச்சியா மதுமிதா, மீராவை அத்தனை பேரும் சேர்ந்து டார்கெட் செய்வது முறையல்ல. அபிராமி அத்தனை முறை செருப்பால அடிப்பேன் செருப்பால அடிப்பேன்னு எப்படி சொல்லலாம்’ எனவும் காஜல் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘எவ்ளோ தைரியம் இருந்தா செருப்பால அடிப்பேன்னு..?’- சீறும் பிக் பாஸ் பிரபலம் வீடியோ