தர்ஷனும் ஷெரினும் இணைந்து தனுஷின் அசுரனில் இருந்து கத்தரிப்பூவழகி பாடலுக்கு நடனம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 21, 2019 12:28 PM
கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் அதன் பரபரப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பிக்பாஸ் போட்டியாளர்கள் எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிக்பாஸில் தர்ஷன் - ஷெரின் நட்பு மிகவும் விவாதிக்கப்பட்டது. மேலும் தர்ஷனின் தோழி சனம் ஷெட்டி கொடுத்த பேட்டிகளும் வைரலானது.
இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்ற பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றது. அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நடிகை ஷெரின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,தனுஷின் அசுரன் பட பாடலான கத்தரிப்பூவழகி பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
How is it !!! from @dhanushkraja Sir Asuran 🤩 pic.twitter.com/JVTuAulNgz
— Sherin Shringar (@SherinShringar_) October 19, 2019