கஜா புயல் பாதிப்பு - வீடு கட்டிக் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 21, 2019 12:16 PM
தமிழகத்தில் டெல்டா பகுதிகள் உட்பட பல பகுதிகளை சூறையாடிய கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து 6 லாரிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டன.
தற்போது நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினிகாந்த் சார்பில் வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த 10 பேரையும் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்திற்கு வரவழைத்து, வீட்டிற்கான சாவியை நடிகர் ரஜினிகாந்த அவர்களிடம் வழங்கினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.
இதனிடையே, ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ திரைப்படத்தினை விஸ்வாசம் திரைப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.