தனுஷின் 'அசுரன்' படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கிய பிரபல சேனல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 17, 2019 03:24 PM
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான படம் 'அசுரன்'. வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, டிஜே, கென், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளது. அதில் அசுரன் திரைப்படம் விஜய் டிவியின் தொலைக்காட்சி உரிமை விஜய் டிவியில் உள்ளதாக அறிவித்துள்ளது.
#Asuran #AsuranWithVijayTV! 🔥 #VijayTelevision pic.twitter.com/G02Q0VNmxt
— Vijay Television (@vijaytelevision) October 17, 2019