கவின் பிரபல நடிகருடன் பகிர்ந்த ஃபோட்டோ வைரல் - ''கன்னா பின்னா கதைகள் ...''
முகப்பு > சினிமா செய்திகள்'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' தொடர்களில் நடித்தன் கவினுக்கு ஏராளமான நடிகர் பட்டாளங்கள் உண்டு. 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார்.

தற்போது அவரது அடுத்து நடிக்கவிருக்கவிருக்கும் படம் குறித்து எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. மேலும் சமூகவலைதளங்களில் பின்தொடரும் ரசிகர்கள் அவர் வெளியிடும் புகைப்படங்கள் பதிவுகளை அவ்வப்போது வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் 'கனா' மற்றும் 'தும்பா' படங்களில் நடித்த முதன்மை வேடத்தில் நடித்த தர்ஷனுடன் கவின் இருக்கும் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், 'கன்னா பின்னா கதைகள்' என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவிற்கு ''அப்படி என்ன கதைச்சீங்க'' என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.