இந்தியன் 2 விபத்து - கமல், காஜல் தப்பித்த அந்த ஒரு நொடி - களத்தில் இருந்தவர் புதிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தின் போது கமல், காஜல் தப்பித்ததை  பற்றி படத்தில் பணிபுரிந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய 2 விபத்தில் கமல், காஜல் தப்பித்த நொடி | kamal, kajal survives shankar's indian 2 accident

இயக்குநர் ஷங்கர் தற்போது இயக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2. கமல் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் 2-வின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று ஈ.வி.பி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்த போது க்ரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் பலியானார்கள், பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2-வின் மெக்கப் பிரிவில் பணிபுரிந்த சீமா டப்பாசும் என்பவர், இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'மிகப்பெரிய விபத்தில் இருந்து கமல், காஜல் அகர்வாலுடன் சேர்ந்து தப்பித்துள்ளேன். ஒரு நொடிக்குள் நாங்கள் இருந்த டென்டை விட்டு வெளியே குதித்துவிட்டு திரும்பி பார்க்கும் போது, எங்கள் சேர்கள் எல்லாம் கீழே விழுந்த க்ரேனால் நசுக்கப்பட்டிருந்தது. ஆனால்  துரதிஷ்ட்ரவசமாக நாங்கள் மூன்று பேரை இழந்துள்ளோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor