www.garudabazaar.com
iTechUS

தனா-வ இப்படியா Bigg Boss கூப்பிட்டாரு?.. வேகமா ஓடிய தனலட்சுமி.. அவரு சொன்னா கரெக்டா தான் இருக்கும்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Bigg boss call dhanalakshmi as Makkal Selvi

Also Read | "பாத்ரூம்-ல எதையோ எடுத்துட்டு போனீங்க, உண்மையா அது?.. பிரியங்கா கேள்வி.. முழித்த அசிம்!!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இது தவிர DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வீட்டையே கலகலப்பாக மாற்றியும் வருகின்றனர். அவர்கள் பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது.

Bigg boss call dhanalakshmi as Makkal Selvi

இதனிடையே, தற்போது சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி வருகிறது. இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளுடனும் சென்ற வண்ணம் உள்ளது. அதே போல, Finale வில் டைட்டில் வின்னராக போகும் நபர் யார் என்பதையும் ஒரு பக்கம் பார்வையாளர்கள் கணித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், தனலட்சுமியை பிக் பாஸ் சொல்லி அழைத்த பெயர் தொடர்பான விஷயம், தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

நடப்பு பிக் பாஸ் சீசனில் இறுதிச்சுற்று வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தனலட்சுமி, பாதியில் திடீரென வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கடுத்து தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சில கருத்துகளையும் தெரிவித்து வந்தனர்.

Bigg boss call dhanalakshmi as Makkal Selvi

அப்படி இருக்கையில், இந்த சீசனில் முந்தைய போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்ததற்கு மத்தியில் தனலட்சுமியும் என்ட்ரி கொடுத்துள்ளார். அனைத்து போட்டியாளர்களிடையே அவர் மிகவும் உற்சாகமாக பேசியும், ஜாலியாகவும் இருந்து வருகிறார். அதே போல, தனா பாதியில் போனது எதிர்பாராத ஒன்று என்றும் மைனா உள்ளிட்டோர் கூறி இருந்தனர்.

அப்படி இருக்கையில், தற்போது தனலட்சுமியை "மக்கள் செல்வி" என பிக் பாஸ் அழைத்துள்ளார். அவர் பாதியில் வெளியேறிய சமயத்தில் தனலட்சுமியை மக்கள் செல்வி என குறிப்பிட்டு நிறைய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகவும் செய்திருந்தது. அப்படி ஒரு சூழலில் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள தனலட்சுமியை மக்கள் செல்வி என பிக் பாஸ் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "மனைவி, பொண்ணு ரெண்டு பேருமே உங்க தீவிர Fans".. சொல்லாம போனா அடிப்பாங்க.. மாகாபா கலகல!!😍

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss call dhanalakshmi as Makkal Selvi

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Makkal Selvi, Vijay Television, Vijay tv will find this news story useful.