www.garudabazaar.com
iTechUS

"என்ன சொல்லி அனுப்புனாங்க உன்ன?".. வந்ததும் வராததுமா தனாவுக்கு செக் வைத்த மணிகண்டா!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Manikanta advice to dhanalakshmi after his entry in bigg boss

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர்.

அப்படி ஒரு சூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது தனலட்சுமி, மணிகண்டா, குயின்சி உள்ளிட்டோர் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் உள்ளே தொடர்ந்து விளையாடி கொண்டிருக்கும் போட்டியாளர்களை பாராட்டியும் நிறைய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Manikanta advice to dhanalakshmi after his entry in bigg boss

இந்த நிலையில், மணிகண்டா பிக்பாஸ் வீட்டிற்கு வரும் போது தனலட்சுமிக்கு அவர் கொடுத்த அட்வைஸ் ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அசல் கோலார் வீட்டிற்குள் வந்த போது அவர் ADKவிடம் சில விஷயம் கேட்க போய், அவர் கண்ணீர் விட்டு கலங்கவும் செய்திருந்தார். போட்டியாளர்களின் செயல்பாடு வெளியே எப்படி இருக்கிறது என்பது பற்றி பேச வேண்டாம் என பிக் பாஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால், இதன் பின்னர் வந்த தனலட்சுமி, வெளியே போட்டியாளர்களுக்கு இருக்கும் பெயர்கள் குறித்தும் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Manikanta advice to dhanalakshmi after his entry in bigg boss

அப்படி இருக்கையில் இதன் பின்னர் வந்த மணிகண்டா, தனலட்சுமியிடம், "தனா, உன்னை என்ன சொல்லி உள்ள அனுப்புனாங்க, நீ என்ன பண்ணிட்டு இருக்க?" என கேட்டதும் அனைத்து போட்டியாளர்களும் அனைத்தையும் உளறி விட்டார் என்றும் குறிப்பிட்டனர். "என்ன சொன்னாங்க" என தனலட்சுமி கேட்டுக்கொண்டே இருக்க, இதற்கு வாயை மூடி இருக்கும்படி மணிகண்டன் சைகை மட்டும் காட்டி இருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Manikanta advice to dhanalakshmi after his entry in bigg boss

People looking for online information on Bigg boss 6 tamil, Dhanalakshmi, Manikanta will find this news story useful.