www.garudabazaar.com
iTechUS

"பாத்ரூம்-ல எதையோ எடுத்துட்டு போனீங்க, உண்மையா அது?.. பிரியங்கா கேள்வி.. முழித்த அசிம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Priyanka about azeem sacrifice task in bigg boss house

Also Read | பிக் பாஸ் வீட்டில்.. விக்ரமன்-ஐ தொடர்ந்து.. "தமிழ்நாடு" என்ற வார்த்தையை சொன்ன அசிம்!!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

Priyanka about azeem sacrifice task in bigg boss house

இது தவிர DD உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது.

இதனிடையே, தற்போது சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி வருகிறது. இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளுடனும் சென்ற வண்ணம் உள்ளது. அதே போல, Finale வில் டைட்டில் வின்னராக போகும் நபர் யார் என்பதையும் ஒரு பக்கம் பார்வையாளர்கள் கணித்த வண்ணம் உள்ளனர்.

Priyanka about azeem sacrifice task in bigg boss house

இந்த நிலையில், பிரபல தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த், பிரியங்கா மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேர்ந்தவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக வருகை புரிந்திருந்தனர். இதில் பிரியங்கா கடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இரண்டாவது இடமும் பிடித்திருந்தவர்.

அவர்களும் போட்டியாளர்கள் இடையே கலகலப்பாக நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். அப்போது அங்கே உள்ள போட்டியாளர்கள் அனைவரை பற்றியும் நிறைய கருத்துக்களை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அப்படி ஒரு சூழலில், அசிம் பற்றியும் சில கருத்துக்களை பிரியங்கா தெரிவித்திருந்தார்.

Priyanka about azeem sacrifice task in bigg boss house

ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் அசிம் பற்றி பேசும் பிரியங்கா, "அசிம் பாத்ரூம்க்குள்ள எதையோ எடுத்துட்டு போனீங்க உண்மையா அது?" என கேட்க, மாகாபாவும் அந்த கேள்வியை ரிப்பீட் செய்கிறார். அவர்கள் இருவரும் எதை கேட்கிறார்கள் என்பது புரியாமல் அசிம் பார்க்க, சக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஆரவாரமும் செய்திருந்தனர். தொடர்ந்து "இல்லை" என்றும் அசிம் பதிலளித்திருந்தார்.

இதற்கடுத்து பேசும் பிரியங்கா, "இது உள்ளுக்குள்ள ரணகளமா இருந்தாலும் நாங்க எல்லாம் அத ரொம்ப ஜாலியா என்ஜாய் பண்ணி பாத்தோம்" என கூறவே, "நாங்களும் உங்கள மாதிரி ஜாலியா என்ஜாய் பண்ணி பாத்துட்டு இருந்தோம்" என ஷிவினும் வேடிக்கையாக குறிப்பிடுகிறார்.

Priyanka about azeem sacrifice task in bigg boss house

முன்னதாக Sacrifice டாஸ்க்கின் போது அசிம் மேக்கப் போடக்கூடாது என  பிக் பாஸ் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் யாருக்கும் தெரியாமல் Foundation-ஐ பாத்ரூம் கொண்டு சென்று மேக்கப் போட்டதாக சக ஹவுஸ்மேட்ஸ் குறிப்பிட்டு அசிமிடம் கேள்விகளையும் எழுப்பி இருந்தனர். இந்த சம்பவம் பெரிய அளவில் விவாதத்தை உண்டு பண்ணி இருந்தது. அதை குறிப்பிட்டு தான் பிரியங்காவும் கேள்வி எழுப்பி.இருந்தார்.

Also Read | "15 லட்சம் கெடச்சா எடுத்துட்டு வந்துடுங்க, Maldives போயிடுவோம் 😂".. விக்ரமன்கிட்ட ஜாலியா சொன்ன Makapa

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka about azeem sacrifice task in bigg boss house

People looking for online information on Azeem, Bigg boss, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Priyanka, Priyanka Deshpande, Vijay tv will find this news story useful.