www.garudabazaar.com
iTechUS

"ஒரு வார்த்தை Trend ஆனது குத்தமா".. பூமர் வேணும்ன்னு விக்ரமன் கிட்ட அடம்புடிச்ச தனா..😅 செம Thug Life.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Dhanalakshmi about boomer to vikraman after trend in bigg boss

Also Read | "விக்ரமன் - ரச்சிதா Chemistry நல்லா இருக்கு, ஆனா என் கூட".. ஷிவினிடம் போட்டு உடைத்த ராபர்ட்!!

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அகமது மீரான், சுரேஷ் சக்கரவர்த்தி, பிரபல விஜேக்கள் ஷோபனா மற்றும் பார்வதி உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றி அவர்கள் தங்களின் விமர்சனத்தையும், அவர்களின் பாசிட்டிவ் கருத்துக்களையும் முன் வைத்து பேசி இருந்தனர். மேலும், இதே சீசனில் முன்பு வெளியேறி இருந்த போட்டியாளர்களான ராபர்ட், அசல் கோலார், ஜிபி முத்து, சாந்தி உள்ளிட்டோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்துள்ளனர்.

Dhanalakshmi about boomer to vikraman after trend in bigg boss

அப்படி ஒரு சூழலில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது தனலட்சுமியும், மணிகண்டாவும் சர்ப்ரைஸாக நுழைந்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த தனலட்சுமி மற்றும் மணிகண்டா ஆகியோர், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளது பல போட்டியாளர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது. அனைவரும் அவர்களை கட்டித் தழுவி வரவேற்றிருந்த நிலையில், பழைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருவது பார்வையாளர்களையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

Dhanalakshmi about boomer to vikraman after trend in bigg boss

இதனிடையே, தற்போது போட்டியாளர்கள் பிக் பாஸ் இடத்தில் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி, ADK முதலில் பிக் பாஸ் போல மாறி போட்டியாளர்களை வழி நடத்தி இருந்தார். மேலும் அவருக்கு தோன்றும் டாஸ்க்குகளை கூட கொடுக்கலாம் என தெரிகிறது.

இதனிடையே, பிக் பாஸ் போல கொஞ்ச நேரத்திற்கு மாறிய ஷிவின், தனலட்சுமி, சாந்தி உள்ளிட்டோரை குழந்தைகள் போல மாற வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து, குழந்தை போலவே பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த தனலட்சுமி, குழந்தைகள் போல அனைத்து செயல்களையும் செய்து கொண்டிருந்தார். அப்படி இருக்கும் நிலையில், குழந்தைகள் அழுவது போலவே அழுதபடி, "எனக்கு பூமர் வேணும், எனக்கு பூமர் வேணும். பூமர் குடுக்க சொல்லுங்க" என கூறிக் கொண்டே இருக்கிறார். இதனைக் கேட்டதும், "கலாய்க்குறா" என மைனா கூறுகிறார்.

Dhanalakshmi about boomer to vikraman after trend in bigg boss

இதன் பின்னர் பேசும் விக்ரமன், "அது எல்லாம் இங்க இல்ல. பூமர் எல்லாம் சாப்பிட்டா அப்புறம் முழுங்கிடுவீங்க" என தெரிவிக்கிறார். அப்போது பேசும் தனலட்சுமி, "அப்புறம் ஏன் அங்கிள் வீட்டுல பூமர் வெச்சுருக்கீங்க" என கூறினார்.

சமீப காலமாக, பிக் பாஸ் வீட்டிற்குள் பூமர் என்பது பற்றிய் கருத்து பரவலாக இருந்து வருகிறது. அசிம், விக்ரமன், அமுதவாணன் உள்ளிட்டோர் பூமர் என மாறி மாறி பலரும் குறிப்பிட்டு வந்த நிலையில், அதனை ஜாலியாக தனலட்சுமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | சமையல் விஷயத்துல விக்ரமன வெச்சு Fun பண்ணிய சாந்தி!!.. இப்டி எல்லாம் மனுஷன் இருந்துருக்காரா? 😅

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi about boomer to vikraman after trend in bigg boss

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Dhanalakshmi, Vikraman will find this news story useful.