www.garudabazaar.com
iTechUS

"மனைவி, பொண்ணு ரெண்டு பேருமே உங்க தீவிர Fans".. சொல்லாம போனா அடிப்பாங்க.. மாகாபா கலகல!!😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Makapa Anand says his wife and daughter are fans of shivin and vikraman

Also Read | "15 லட்சம் கெடச்சா எடுத்துட்டு வந்துடுங்க, Maldives போயிடுவோம் 😂".. விக்ரமன்கிட்ட ஜாலியா சொன்ன Makapa

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, மணிகண்டா உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

Makapa Anand says his wife and daughter are fans of shivin and vikraman

இது தவிர DD உள்ளிட்ட பல பிரபலங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பல பாசிட்டிவ் Vibe-களையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் டிடி என்டரி கொடுத்து வலம் வந்த சமயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருந்தது.

இதனிடையே, தற்போது சில ஹவுஸ்மேட்ஸ் இடையே வாக்குவாதங்களும் அரங்கேறி வருகிறது. இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் பல்வேறு விறுவிறுப்பான நிகழ்வுகளுடனும் சென்ற வண்ணம் உள்ளது. அதே போல, Finale வில் டைட்டில் வின்னராக போகும் நபர் யார் என்பதையும் ஒரு பக்கம் பார்வையாளர்கள் கணித்த வண்ணம் உள்ளனர்.

Makapa Anand says his wife and daughter are fans of shivin and vikraman

இந்த நிலையில், பிரபல தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த், பிரியங்கா மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சேர்ந்தவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினர்களாக வருகை புரிந்திருந்தனர். இதில் பிரியங்கா கடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இரண்டாவது இடமும் பிடித்திருந்தவர்.

அவர்களும் போட்டியாளர்கள் இடையே கலகலப்பாக நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். அப்போது, தனது குடும்பத்தினர் பற்றி விக்ரமனிடம் மாகாபா கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதன்படி, கேமரா நோக்கி பேசிய விக்ரமன், "ஏமி மற்றும் சூசன், ரொம்ப ரொம்ப நன்றி. எங்களை பாக்குறீங்க, பாத்து ரொம்ப புடிச்சு இருக்குன்னு சொல்லி அனுப்பி இருக்கீங்க. அப்பா சூப்பரா பண்றாரு. எங்களை எல்லாரையும் சிரிக்க வெச்சாரு. உங்களையும் தினம் தினம் சிரிக்க வைப்பாரு. அவரை நீங்க சிரிக்க வெச்சிட்டு இருக்கீங்க" என கூறியதும் விக்ரமன் டான்ஸுக்கு அவர்கள் ஃபேன் என்றும் மாகாபா ஜாலியாக கூறுகிறார்.

Makapa Anand says his wife and daughter are fans of shivin and vikraman

அதே போல, சூசன் மாகாபாவின் குழந்தை இல்லை என்றும் மனைவி என்றும் ஷிவின் கூற, "சூசன், ஏமி ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி. மாகாபா சொன்னாரு, என்ன உங்களுக்கு புடிக்கும்ன்னு. ரொம்ப ரொம்ப நன்றி. நான் வெளிய வந்ததும் உங்களை எல்லாம் பாக்குறேன்" என தெரிவித்தார்.

Makapa Anand says his wife and daughter are fans of shivin and vikraman

அதே போல, மற்றொரு தருணத்தில் பேசும் மாகாபா, "சூசன், என் பொண்ணு ஏமி இவங்க வந்து ரெண்டு பேரோட தீவிர ஃபேன். ஒண்ணு ஷிவின், இன்னொன்னு விக்ரமன். ஸ்பெஷலா சொல்ல சொன்னாங்க. நான் மறந்துட்டேன். இல்லைன்னா அடிப்பாங்க என்னைய போட்டு அதுனால தான்" என்றும் குறிப்பிட்டார்.

Also Read | "பாத்ரூம்-ல எதையோ எடுத்துட்டு போனீங்க, உண்மையா அது?.. பிரியங்கா கேள்வி.. முழித்த அசிம்!!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Makapa Anand says his wife and daughter are fans of shivin and vikraman

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Makapa, MaKaPa Anand, Shivin, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.