www.garudabazaar.com
iTechUS

‘ஊர் கிழவி’ பட்டபெயரை பாட்டா மாத்தப் போறாரா? வெளிய வந்ததும் ADK எடுத்த பரபரப்பு முடிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss 6 ADK going to make song based on his nick name

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி சுமார் 98 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற ஏடிகே, முதல்முறையாக வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

"எல்லோருக்கும் வணக்கம். பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும்போது எனக்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. என்னுடைய திறமைக்கு வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்-க்கு நன்றி. முகம் தெரியா என்னை இன்னைக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாம உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்த்துள்ள மக்களுக்கு நன்றி. அதுமட்டும் இல்லாம என்னோட தியாகத்துக்கு கிடைச்ச கமல் சாரோட இந்த கேப். என்னோட முடியை மறைக்கிறதுக்காக சார் இதை கொடுத்தாரு. அவர் போட்ட கேப்பை, அவர் கையால வாங்குனது ரொம்ப சந்தோஷம். நான் இந்த முடியை வெட்டப்போறது இல்ல. அப்படியே வச்சுக்க போறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக பேசியவர் தனக்கு கொடுக்கப்பட்ட ஊர் கிழவி என்கிற பட்டத்தை வைத்து ஒரு நல்ல பாடலை உருவாக்கி அந்த பெயரையே நற்பெயராக மாற்றப் போவதாக தெரிவித்திருக்கிறார். இதை பார்த்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். முன்னதாக பிக் பாஸ் வீட்டை விட்டு சென்ற போது பிக் பாஸ், “இதுவரை உனக்கு கிடைக்காத அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதைவிட வேற என்ன வேண்டும்?” என்று குறிப்பிட்டு ஏடிகேவை அசிம் வாழ்த்தி இருந்தார்.

ஏடிகேவும் அதை ஏற்று பிக்பாஸ் வீட்டு முன் மண்டியிட்டு நன்றி சொல்லி விடை பெற்றார். அப்போது பிக் பாஸ் எடிகேவுக்கு, ‘வெல் ப்ளேய்டு ஏடிகே, வெளியில் உங்கள் விஸ்வரூப வெற்றிக்கு வாழ்த்துகக்ள்’ என தன் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss 6 ADK going to make song based on his nick name

People looking for online information on ADK, Bigg boss 6 tamil promobigg boss 6 tamil contestants listbigg boss tamil, Bigg boss tamil 6bigg boss season 6vijay tvbigg boss tamil promo, Bigg boss tamil 6bigg boss tamil season 6bigg boss tamil 6 contestantsrachitha mahalakshmi will find this news story useful.