www.garudabazaar.com
iTechUS

டிடியை தொடர்ந்து பிக்பாஸ்க்குள் வந்த பிரபல ஆங்கர்ஸ்!.. வந்ததுமே உற்சாகமான Housemates!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Popular hosts entry after DD in bigg boss house finale week

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்க்காக கொடுக்கப்பட்டிருந்தது. இதன் பெயரில் ஒரு சில குழப்பங்களும், சண்டைகளும் கூட அரங்கேறி இருந்தது.

இப்படியாக கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில் கமல்ஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் உரையாடி இருந்தார். இதற்கடுத்து ADK-வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி DD பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை புரிந்திருந்தார்.

அவர் அனைத்து போட்டியாளர்கள் குறித்து உரையாடி இருந்த விஷயங்கள் பெரிய அளவில் பிக் பாஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தமிழ் பிக் பாஸ் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தற்போதைய நாட்கள் மிக மிக உற்சாகமாக சென்று கொண்டிருப்பது அசத்தலான தருணமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், DD-ஐ தொடர்ந்து மற்ற சில பிரபல தொகுப்பாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். கடந்த பிக் பாஸ் சீசனில், போட்டியாளராக களமிறங்கி இருந்தார் தொகுப்பாளினி பிரியங்கா. இவர்  இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்த நிலையில், தற்போது விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். மேலும் அவருடன் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்தும் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க, ஒட்டுமொத்த வீடும் தற்போது திருவிழா போல மாறி உள்ளது.

இவர்கள் இருவரைக் கண்டதும் அனைத்து போட்டியாளர்களும் உற்சாகத்தில் திளைத்திருந்தனர். அதே போல, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் உள்ளே வந்து போட்டியாளர்கள் பற்றிய பாடல்களையும் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Popular hosts entry after DD in bigg boss house finale week

People looking for online information on Bigg boss 6 tamil, Dhivya Dharshini, MaKaPa Anand, Priyanka Deshpande will find this news story useful.