www.garudabazaar.com
iTechUS

”இத விட பெரிய அங்கீகாரம் இல்ல” - வெளியே போகும்போது ADK வை நெகிழவெச்ச அசிம் bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

Azeem about ADK after his elimination in bigg boss house

Also Read | எமோஷன் ஆன GP முத்து.. டக்குன்னு கமல் கேட்ட கேள்வி.. விழுந்து சிரிச்ச போட்டியாளர்கள்..!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம் தற்போது ஏழு போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

Azeem about ADK after his elimination in bigg boss house

இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்க்காக கொடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக லுங்கி மற்றும் பனியன் தான் அசிம் அணிந்து வலம் வந்திருந்தார். அவரைப் போல அமுதவாணனும் பிரவுன் நிற தலைமுடியுடன் இருக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து முந்தைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வந்த பின் Sacrifice டாஸ்க் 2.0 என்ற பெயரில் மீண்டும் சில டாஸ்க்குளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட அதன் காரணமாக சில பிரச்சனைகளும் நடைபெற்றது.

Azeem about ADK after his elimination in bigg boss house

இப்படியாக இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கமல்ஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி இருந்தார். அப்போது போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் கமல்ஹாசன் உரையாடி இருந்தார். போட்டியாளர்களிடையே நிறைய கேள்விகளை எழுப்பி, அதற்கான அசத்தல் பதில்களையும் பெற்றிருந்தார் கமல்ஹாசன். இதற்கடுத்து ADK வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ADK வெளியேறிய போது அசிம் சொன்ன விஷயம் பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் ADK மற்றும் அசிம் ஆகியோர் சிறந்த நண்பர்களாக இருந்த அதே வேளையில், நிறைய முறை சண்டையும் போட்டுள்ளனர். பல முறை ஆவேசமாக சண்டை போட்டு மோதிக் கொண்ட போதும் மீண்டும் அவர்கள் அதிக நட்பு பாராட்டியும் வந்துள்ளனர்.

Azeem about ADK after his elimination in bigg boss house

அப்படி ஒரு சூழலில், ADK எலிமினேட் ஆனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அசிமை கட்டியணைத்தபடி பேசும் அவர், "இதுக்குத்தான் உன்ன பக்கத்துல உட்கார சொன்னேன். நம்ம நிறைய சண்டை புடிச்சுருக்கோம். நீ வேதனைப்படுத்தி இருக்கே. ஆனாலும் உன்னை ரொம்ப புடிக்கும். இதுக்கு தான் பக்கத்துல உட்கார சொன்னேன்" என உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்து ADK வெளியேறும் கடைசி தருணத்தில் பேசிய அசிம், "நிறைய பாட்டு பண்ணி இருக்கே, நிறைய படங்கள் பண்ணி இருக்கே. பெரிய பெரிய Musician ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் கூட ஒர்க் பண்ணி இருக்கே. ஆனா உனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இத்தனை நாள் அந்த அளவுக்கு கிடைக்கலன்னு சொல்லி இருக்கே. இத விட பெரிய அங்கீகாரம் ADK வுக்கு இல்ல" என கூறியதும் பிக்பாஸ் வீட்டு முன்பு மண்டியிட்டு வணங்கி பின், “என் நாட்டில் இருந்து வந்து இந்த அன்பை பெற்றதற்கு மகிழ்ச்சி, அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என ADK கூறினார்.

Also Read | "விக்ரமன், அசிம் பேசும்போதே இதெல்லாம் சொல்லிருக்கணும்!".. அசல் சொன்னது என்ன? bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Azeem about ADK after his elimination in bigg boss house

People looking for online information on ADK, Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil will find this news story useful.