www.garudabazaar.com
iTechUS

பிக்பாஸ் வீட்ல இருந்து வெளியேறிய பின் ADK பகிர்ந்த எமோஷனல் வீடியோ.. !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ADK Shares Thanking video after eliminate from BiggBoss 6

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

ADK Shares Thanking video after eliminate from BiggBoss 6

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

ADK Shares Thanking video after eliminate from BiggBoss 6

இதனை தொடர்ந்து ADK-விற்கு தொப்பி ஒன்றை கமல் பரிசாக அளித்திருந்தார். இதற்கு நன்றி சொல்லி அங்கிருந்து ADK வெளியேறினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ADK பகிர்ந்துள்ளார். அதில்,"எல்லோருக்கும் வணக்கம். பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும்போது எனக்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. என்னுடைய திறமைக்கு வாய்ப்பு கொடுத்த பிக்பாஸ்-க்கு நன்றி. முகம் தெரியா என்னை இன்னைக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாம உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்த்துள்ள மக்களுக்கு நன்றி. அதுமட்டும் இல்லாம என்னோட தியாகத்துக்கு கிடைச்ச கமல் சாரோட இந்த கேப். என்னோட முடியை மறைக்கிறதுக்காக சார் இதை கொடுத்தாரு. அவர் போட்ட கேப்பை, அவர் கையால வாங்குனது ரொம்ப சந்தோஷம். நான் இந்த முடியை வெட்டப்போறது இல்ல. அப்படியே வச்சுக்க போறேன்" என்கிறார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் பேசும் அனைவர்க்கும் தான் நன்றி கூறுவதாகவும் ADK தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ADK (@adkofficial)

தொடர்புடைய இணைப்புகள்

ADK Shares Thanking video after eliminate from BiggBoss 6

People looking for online information on ADK, Biggboss, Biggboss6Tamil will find this news story useful.