www.garudabazaar.com
iTechUS

Vintage விஜய் சேதுபதி.. 2009-ல் VJS-க்கு போட்டோ ஷூட் நடத்திய அல்போன்ஸ் புத்திரன்.. வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

Alphonse Puthren Wishes Vijay Sethupathi for Birthday

Also Read | பிரபல வெற்றிப்படத்தின் PART-2.. மலேஷியா ஷூட்டிங்கில் விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட காயம்..

1996ஆம் ஆண்டு முதல் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து வந்தவர் விஜய் சேதுபதி, லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, புதுப்பேட்டை, எம். குமரன் S/o மகாலெட்சுமி, லீ, வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா ஆகிய படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக கவனிக்க தக்க வகையில் நடித்திருப்பார்.

பின் தென்மேற்கு பருவக்காற்று, பீட்ஸா, சூது கவ்வும், சுந்தர பாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். அவ்வப்போது கேமியோ, வில்லன் ரோல்களிலும் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. 

Alphonse Puthren Wishes Vijay Sethupathi for Birthday

விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

மேலும் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் Farzi, அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Alphonse Puthren Wishes Vijay Sethupathi for Birthday

இன்று விஜய் சேதுபதி தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு அவரை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார். "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா, என ட்வீட் செய்து 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஹீரோ' குறும்படத்தின் படப்பிடிப்பில் நடத்திய ஃபோட்டோ ஷூட் போட்டோவை அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ளார்.

Also Read | "ஆட்ட நாயகன்".. உலக அளவில் 'வாரிசு' படத்தின் 5 நாள் வசூல்.. அதிகாரப்பூர்வ தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren Wishes Vijay Sethupathi for Birthday

People looking for online information on Alphonse Puthren, Vijay Sethupathi, Vijay Sethupathi birthday will find this news story useful.