‘கமல் சார் எனக்கு மாமனும் இல்ல மச்சானும் இல்ல...’- பிக் பாஸ் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்ட பிரபல நடிகர் பொன்னம்பலம், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றியும், நடிகர் கமல்ஹாசன் பற்றியும் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Bigg Boss star Ponnambalam says Kamal Haasan is the pride of Cinema

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. முதல் இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதிநாட்களில் கமல்ஹாசன் தனக்கே உரிய ஸ்டைலில் உரையாடி, போட்டியாளர்களை கையாளும் விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

இந்நிலையில், நடிகர் பொன்னம்பலம் Behindwoods-ன் Second Show வித் நிக்கி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கமல்ஹாசன் குறித்தும், தற்போதைய போட்டியாளர்கள் குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், ‘அபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்தே கமல் சாரை பார்க்கிறேன். இப்போ இருப்பது சிஜி பணிகள் அப்போது கிடையாது. பாலிவுட்டில் ஷாருக்கான் சமீபத்தில் குள்ளனாக நடித்திருந்தார். கமல் சார் நடித்ததில் 10% கூட அவர் கஷ்டப்படவில்லை.’

‘மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் அத்தனை ரோல், எல்லாமே ஒரே கமல் தான். கமல் சாரை பார்த்தால் சிவாஜி தான் ஞாபகம் வரும். கமல் சார் சினிமாவுக்கு பிரம்மன். அவர் எனக்கு மாமனும் இல்ல மச்சானும் இல்ல.. அவர் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்’ என பொன்னம்பலம் தெரிவித்தார்.

‘கமல் சார் எனக்கு மாமனும் இல்ல மச்சானும் இல்ல...’- பிக் பாஸ் பிரபலம் வீடியோ