Breaking: மாஸு மரணம்... சூப்பர் ஸ்டார் - அனிருத் இணையும் தர்பார் Song குறித்த தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 16, 2019 12:24 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கப்படவிருக்கிறதாம். இது பாடல் படப்பிடிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : Darbar, Superstar, Rajinikanth, Anirudh Ravichander, AR Murugadoss