ரொம்ப ஆர்வமா இருக்கேன் - விஜய்யின் 'தளபதி 64' குறித்து அனிருத் மகிழ்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 25, 2019 10:31 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் பிகில். மகளிர் ஃபுட் பாலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.
இதனையடுத்து தளபதி விஜய், மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் ஒய்.ஜி.மகேந்திரனின் 3ஜி என்ற நாடகத்தில் பார்வையாளராக இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கத்திக்கு பிறகு தளபதியுடன் படம் பன்றது மகிழ்ச்சியாக இருக்கு.
ரொம்ப ஆர்வமாக இருக்கேன். என்னுடைய பெஸ்டை கொடுப்பேன் என்றார். பேட்டக்கு அப்புறம் என்னோட தமிழ் படம் தர்பார். படத்தின் பணிகள் ஓரளவுக்கு முடிந்தது. நவம்பர், டிசம்பரில் இசை வெளியீடு இருக்கும் என்றார்.
ரொம்ப ஆர்வமா இருக்கேன் - விஜய்யின் 'தளபதி 64' குறித்து அனிருத் மகிழ்ச்சி வீடியோ