புல்லிங்கோஸ்... தளபதியின் வெறித்தனத்தை காண ரெடியா? பிகில் ரிலீஸ் தேதி அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 17, 2019 04:32 PM
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் செய்துள்ளார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழவை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரைலர் யூடியூபில் 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்றது. முதன்முதலாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#BigilReleaseDate at 6:00pm 😊😊😊 #PodraVediya #BigilDeepavali 🔥🔥🔥@actorvijay @Ags_production @Atlee_dir @arrahman #Nayanthara
— Archana Kalpathi (@archanakalpathi) October 17, 2019