தளபதி ஆட்டம் வெறித்தனம்..! - பிகிலு சத்தம் சும்மா தியேட்டர கிழிக்கப்போகுது! ரிலீஸ் தேதி இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 17, 2019 06:03 PM
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழவை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரைலர் யூடியூபில் 2 மில்லியன் லைக்ஸ்களை பெற்றது. முதன்முதலாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘பிகில்’ திரைப்படம் வரும் அக்.25ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.