தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தின் முதல் நாள் முதல் காட்சி குறித்து பிரபல திரையரங்கம் தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 17, 2019 02:06 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அப்பா - மகன் என தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் 'பிகில்'. இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்த ராஜ், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரோஹினி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ரேவந்த், பிகில் படத்துக்கு 1 மணி ஷோ இயலாது என்பது போல் தோன்றுகிறது. அதிகாலை 4 மணிக்காக கடுமையா முயற்சித்துக்கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Bigil, Thalapathy, Vijay, Nayanthara, Atlee, Rohini Silver Screen