''ஹீரோ' டீஸரை பார்த்துட்டேன் இருந்தாலும்...'' - பிரபல ஹீரோயின் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 23, 2019 12:11 PM
'நம்ம வீட்டுப்பிள்ளை' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு சிவகார்த்திகேயன் 'ஹீரோ' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'இரும்புத்திரை' இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியாகி செம் ட்ரெண்டான நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை (October 24 ) காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் கல்யாணி அலாரம் வைத்து விட்டதாக ஃபோட்டோ பகிர்ந்தார். அதற்கு இந்த படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இத நானே எதிர்பார்க்கலயே என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த கல்யாணி, ''என்ன தான் டீசர பார்த்துட்டாலும் அந்த லிங்க்கை கிளிக் பண்ணி எல்லோரோடையும் பார்க்குறதுல ஒரு தனி எக்ஸைட்மென்ட்'' என்று பதிலளித்துள்ளார்.
Hahaha yess.. enna dhaan teaser paathuttaalum, antha link-a click panni ellaarodayum paakkaradhule oru thani excitement ... 🤪
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) October 23, 2019