குட்டி சித்தப்பு..! - பிக் பாஸ் சரவணனின் மகனுடன் கவின் மற்றும் சாண்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி காதல், சண்டை உள்ளிட்ட சர்ச்சைகளால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

Bigg Boss Sandy and Kavin meets Chithappu Saravanan's Son

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் வின்னராக முகேன் அறிவிக்கப்பட்டார். இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக வைத்திருந்த சாண்டி இரண்டாம் இடம் பெற்றார். இந்த சீசனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், பிக் பாஸ் வீட்டில் ஒரு உறவு முறையுடனே வாழ்ந்தனர். குறிப்பாக சரவணன் மீது சாண்டி, கவின் உள்ளிட்டோர் வைத்த பாசம் பலரையும் கவர்ந்தது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து குறிப்பிட்ட சில பிரச்சனை காரணமாக நடிகர் சரவணன் விலக்கப்பட்டார். செல்லமாக சித்தப்பு என்று அழைக்கப்படும் சரவணனின் திடீர் எவிக்‌ஷன் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், கவின் மற்றும் சாண்டியை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சி நிறைவடைந்ததையொட்டி, போட்டியாளர்கள் சக பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸை சந்திப்பது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதுமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சாண்டி மற்றும் கவின் ஆகியோர் சித்தப்பு சரவணனை சந்தித்து, அவரது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘டியர் சித்தப்பு..’ என கூறி சரவணனின் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

With my dear chithappu 💕

A post shared by SANDY (@iamsandy_off) on