'பெர்சனலா அவங்க எப்படினு தெரிஞ்சுக்கணும்?' - தனது டேட்டிங் ஆசையை தெரிவித்த கவின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சரவணன் மீனாட்சி' தொலைக்காட்சி தொடரின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் கவின். பின்னர் 'சத்ரியன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் 'நட்புனா என்னனு தெரியுமா?' படத்தின் மூலம் ஹீரோவானார்.

Bigg Boss 3 fame Kavin Speaks about Director Selvaraghavan

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு நட்பு, காதல் உள்ளிட்ட விஷயங்களால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற Behindwoods Gold Medals விருது விழாவில் Most Popular person on television on Male விருது வழங்கப்பட்டது. அப்போது தொகுப்பாளர் தாரா கையில் ஒரு பூவை யாரோடு டேட் பண்ண நினைக்குறீங்க ? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், ''செல்வராகவன் சார். அவர் படங்கள்லாம் பார்த்து அவர் பெர்சனலா எப்படி இருப்பாங்கனு தெரிஞ்சுக்கணும். நேர்ல பேசும் போது அவரது எண்ணங்கள் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கலாம்'' என்றார்.

'பெர்சனலா அவங்க எப்படினு தெரிஞ்சுக்கணும்?' - தனது டேட்டிங் ஆசையை தெரிவித்த கவின் வீடியோ

Entertainment sub editor