ராகாவா லாரஸுக்கு கிடைத்த ’மெர்சலான’ விருது
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 23, 2019 02:16 PM
ரஜினி நடித்த 'உழைப்பாளி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடன இயக்குநராக அறிமுகம் ஆனவர் ராகவா லாரன்ஸ். பின்னர் கதாநாயகன், இயக்குநர் என்று பல்வேறு அவதாரங்கள் எடுத்த அவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பணியாற்றி உள்ளார்.
இந்த ஆண்டு இவர் இயக்கி வெளியான 'காஞ்சனா 3' பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தன்னிடம் உதவி கேட்போருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் லாரன்ஸ் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் தன்னிடம் பெரும் எண்ணிக்கையில் உதவி கேட்போருக்கு உதவ லாரன்ஸ் தமிழக முதல்வரை நேரில் சந்தித்தது குறிப்பிட த் தக்கது.
இவர் சேவைகளை பாராட்டி அவருக்கு 5 ரூபாய் டாக்டர் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்து வந்த டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த விருது வழங்கப்பட்டது. 5 ரூபாய் டாக்டரை தழுவி அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படத்தில் விஜய் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் தன் சேவைக்காக அன்னை தெரசா விருது பெற்றிருந்தார்.