செல்வராகவன் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணியின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் குறித்த தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 14, 2019 07:49 PM
தனது வித்தியாசமான முயற்சிகளின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் இயக்குநர் செல்வராகவன். இவரது 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' படங்களின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இந்த படத்தின் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன், ரெஜினா கேஸன்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது தகவல் கிடத்துள்ளது. அதன் படி இந்த படம் வருகிற டிசம்பர் 25 அல்லது டிசம்பர் 27 ஆகிய வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.