நடிகர் பாலாசிங் மறைவு குறித்து இயக்குநர் செல்வராகவன் வருத்தம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 27, 2019 03:51 PM
நடிகர் நாசர் இயக்கி நடித்த 'அவதாரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலா சிங். அதனைத் தொடர்ந்து 'விருமாண்டி', 'புதுப்பேட்டை', 'என்ஜிகே' உள்ளிட்ட படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பாலாசிங் இன்று (27-11-2019) அதிகாலை 1 மணியளவில் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாலா சிங் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் என்னுடைய நண்பர் . அவருடைய மறைவு எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.
My deepest condolences to the family of #BalaSingh . He was a wonderful actor and a dear friend. Immensely saddened by his demise. Thoughts and prayers with his loved ones. Rest in peace my friend.
— selvaraghavan (@selvaraghavan) November 27, 2019