துருவ் விக்ரமின் 'ஆதித்யா வர்மா' படத்துக்காக இதனை செய்த சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள 'ஆதித்யா வர்மா' படத்தை E4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

SivaKartikeyan written lyrics for a song in Adithya Varma

இந்த படத்தை கிரீசயா இயக்க, ரதன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பனிட்டா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ஆதித்யா வர்மா திகழ்கிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

கிரிசாயா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிடா சாந்து நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். 

இந்த நிலையில் ஆதித்ய வர்மா படத்தின் கதாநாயகனான துருவ் இந்த படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார். அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து ஆதித்ய வர்மா படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி உள்ளார்.

துருவ் விக்ரமின் 'ஆதித்யா வர்மா' படத்துக்காக இதனை செய்த சிவகார்த்திகேயன்! வீடியோ