"நாங்கள் அருகதையற்றவர்கள் முடிந்தால் மன்னித்துவிடு" சேரனின் உருக்கமான பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 29, 2019 11:36 AM
குழந்தை சுஜித் உயிரிழப்பு குறித்து திரை பிரபலங்கள் பலரும் தன் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜித் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அன்று மாலை முதலே மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றன. ஆனால் குழந்தையை மீட்க மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் பின்னடைவை சந்தித்தது. நவீன எந்திரங்கள் உதவியுடன் இரவு பகலாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் என அனைவரும் தூக்கமின்றி நான்கு நாட்களாய் குழந்தையை மீட்க போராடினர். ஆனால் நேற்றிரவு, குழந்தை சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்ததாக அறிவித்தார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
இந்நிலையில் குழந்தை சுஜித்தின் மரணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரிலும் தங்களின் இரங்கலையும் வலியையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் சேரன் பதிவிட்ட டிவிட்டில், விழிப்புணர்வுக்கு விதையானாய்.. விடைகொடுக்கக்கூட எங்களுக்கு அருகதை இல்லை முடிந்தால் மன்னித்துவிடு இம்மண்ணில் மகனாய் பிறப்பித்த கடவுளை.. என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
விழிப்புணர்வின்
விதையானாய்..
விடைகொடுக்கக்கூட
நாங்கள்
அருகதையற்றவர்கள்
முடிந்தால்
மன்னித்துவிடு
இம்மண்ணில் பிறப்பித்த
கடவுளை..... pic.twitter.com/YcxJk3Js7S
— Cheran (@directorcheran) October 29, 2019