‘இந்த கதைய எங்க இருந்து திருடியிருக்காங்கன்னு பாப்போம்..’- கூர்கா டிரைலர் வெளியீடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள ‘கூர்கா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Yogi Baabu's Gurkha trailer has released by Rockstar Anirudh

சாம் ஆண்டன் இயக்கயுள்ள ‘கூர்கா’ திரைப்படத்தில் யோகிபாபு, சார்லி, கனடா மாடல் எலிஸா, ஆனந்தராஜ், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இப்படத்தின் டிரைலர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த டிரைலரில், விஜய்யின் பிரபலமான I'm Waiting என்ற வசனத்தையும், அஜித் பேசிய ‘உலகமே உன்ன எதிர்த்தாலும் நீயா ஒத்துக்கொள்ளும் வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்போதும்..’ என்று யோகிபாபு வசனம் பேசியுள்ளார்.

‘இந்த கதைய எங்க இருந்து திருடியிருக்காங்கன்னு பாப்போம்..’- கூர்கா டிரைலர் வெளியீடு வீடியோ