www.garudabazaar.com

'புது கண்ணம்மா'வின் நடிப்பில் மீண்டும் உருவான மொத்த கதை!.. வேறலெவல் ப்ரோமோ! யார் இவங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியல் பாரதி கண்ணம்மா. தற்போது இந்த சீரியலின் கதாநாயகி மாற்றம் குறித்த பேச்சுகள் தான் டிரெண்டிங்கில் உள்ளன.

Bharathi Kannamma promo recreted scenes with new Kannamma

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் திருமணமாகி 8 வருடங்கள் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், இவர்களின் இரண்டு பெண்குழந்தைகளில் ஒரு குழந்தை பாரதியிடமும், இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்கின்றனர்.

Bharathi Kannamma promo recreted scenes with new Kannamma

இரண்டு குழந்தைகள் தங்கள் குழந்தைகள் தான் என்கிற உண்மை கண்ணம்மாவுக்கு மட்டுமே தெரியும். ஆனால் பாரதிக்கு தெரியாது. இதனிடையே தன்னிடம் வளரும் ஹேமா மீது கண்ணம்மா பாசமாக இருப்பதால், பயத்தில் பாரதி, கண்ணம்மாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Bharathi Kannamma promo recreted scenes with new Kannamma

இதில் இதுவரை கண்ணமாவாக நடித்துவந்த ரோஷினி ஹரிபிரியன், இந்த சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில், இவருக்கு பதிலாக வினுஷா எனும் புதிய நடிகை கண்ணம்மாவாக நடிக்கிறார்.

Bharathi Kannamma promo recreted scenes with new Kannamma

இதற்கென இதுவரை கண்ணம்மாவுக்கும் பாரதிக்கும் நடந்த அனைத்து பழைய காட்சிகளும் வினுஷாவைக் கொண்டு ரீ ஷூட் செய்த புதிய புரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Bharathi Kannamma promo recreted scenes with new Kannamma

கண்ணம்மா கேரக்டருக்காக ரோஷினி ஹரிபிரியன் போலவே டஸ்கி ஸ்கின் டோன் கொண்ட வினுஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாடலிங், ஃபோட்டோஷூட் என பிஸியாக இருந்த வினுஷா, விரைவில் வெளியாகவுள்ள N4 எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்கள் கண்ணம்மாவுக்கென தங்கள் மனதில் தனி இடம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ரோஷினி ஹரிபிரியனுக்கு மாற்றாக அவ்விடத்தை நிரப்பவருகிறார்  வினுஷா.

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma promo recreted scenes with new Kannamma

People looking for online information on Bharathi kannamma promo, Bharathi Kannamma today, Bharathi kannamma today promo, Bharathi Kannamma viral, BharathiKannamma, Trending will find this news story useful.