Annatha Others ua
Jai been others
www.garudabazaar.com

“கண்ணம்மா போட்ட மாஸ்டர் ப்ளான்!”.. கைதான வெண்பா.. பரபரப்பு ப்ரோமோ! #BharathiKannamma

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமாகவும் வரவேற்பை பெற்ற சீரியலாகவும் திகழ்ந்து வருகிறது.

Venba arrested kannamma master plan bharathi kannamma promo

இந்த சீரியலின் முக்கிய வில்லி வெண்பா. பாரதி & கண்ணம்மா இருவருக்கும் இடையில் சிக்கல்களை உண்டுபண்ணி, தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதற்கு காரணமான வெண்பா, பாரதியை ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

Venba arrested kannamma master plan bharathi kannamma promo

அவரைத் திருமணம் செய்து கொள்ளவே, வெண்பா இத்தனை தகிடுதத்தங்களையும் செய்து வருகிறார். இதனிடையே பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் பிறந்த இரண்டு குழந்தைகள் இவர்கள் இருவரிடமும் தனித்தனியே வளர்ந்து வருகின்றனர். பாரதியை பொறுத்தவரை, தான் வளர்த்து வரும் ஹேமா, தன் குழந்தை என்று தெரியாமலே வளர்த்து வருகிறார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளும் தங்கள் குழந்தைகள் தான் என்கிற உண்மையை கண்ணம்மாவுக்கு மட்டும் தெரிய வந்தது.

Venba arrested kannamma master plan bharathi kannamma promo

ஆனால் கண்ணம்மாவின் இன்னொரு குழந்தை பற்றிய விபரம் தனக்கு தெரியும் என்று வெண்பா கண்ணம்மாவிடம் பொய் சொல்லி, சுற்றலில் விட்டு வந்திருந்தார். அதை தற்போது கண்டுபிடித்துவிட்ட கண்ணம்மா, வெண்பாவை டிசைன் டிசைனாக கலாய்த்து வந்தார்.

Venba arrested kannamma master plan bharathi kannamma promo

இந்நிலையில் தற்போது வெண்பாவின் ஹாஸ்பிடலுக்கு சிலர் வந்து கருக்கலைப்பு செய்யச் சொல்லி கேட்பது போல் கேட்க, வெண்பா பணம் வாங்கிக் கொண்டு அதற்கு சம்மதிக்க, பதுங்கியிருந்த போலீஸார் கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.

Venba arrested kannamma master plan bharathi kannamma promo

வெண்பாவை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். அதற்கு கண்ணம்மா போட்ட ப்ளான் தான் காரணம் என கண்ணம்மாவே கூறுகிறார். வெண்பாவை பார்த்து டாட்டாவும் காட்டுகிறார் கண்ணம்மா. இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Venba arrested kannamma master plan bharathi kannamma promo

People looking for online information on Bharathi Kannamma, Bharathi kannamma promo, Bharathi Kannamma Promo today, Bharathi kannamma today episode, Bharathi kannamma today promo will find this news story useful.