Jango Others
www.garudabazaar.com

"நானும் குழந்தையும் நல்லாருக்கோம்".. Delivery-க்கு பிறகு 'பாரதி கண்ணம்மா' வெண்பாவின் முதல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா, சீரியலில் வெண்பா எனும் வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஃபரீனா.

Bharathi Kannamma venba farina first post after delivery

இவர் அண்மைக்காலமாக கர்ப்பம் தரித்து இருந்தார்.  எனினும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையிலும் சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டுமா என்கிற பலரது கேள்விகளையும் பேச்சுகளையும் புறந்தள்ளிய ஃபரீனா, மிகவும் பாசிடிவாகவும் ஆரோக்கியத்துடனும் தான் செய்வதை தொடர்ந்துவந்தார்.

Bharathi Kannamma venba farina first post after delivery

இதனிடையே டெலிவரி காரணமாக ஃபரீனா சம்பந்தமான காட்சிகள் சீரியலில் குறையத் தொடங்கின. இதனை அடுத்து, பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா சிறைக்கு செல்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெண்பா கேரக்டர் சிறைக்கு சென்று விட்டதாக காட்டப்பட்டு விட்டது.

Bharathi Kannamma venba farina first post after delivery

இதனிடையே தனக்கு குழந்தை பிறந்து இருப்பதாகவும், தானும் குழந்தையும் நன்றாக இருப்பதாகவும் அனைவரின் அன்புக்கும் நன்றி என்றும் சோசியல் மீடியா பக்கத்தில் ஃபரீனா தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பாரதி கண்ணம்மா, சீரியலில் இனி வெண்பாவை காண முடியும் என்றும் ஃபரீனா உறுதியளித்திருக்கிறார். ரசிகர்கள் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Bharathi Kannamma venba farina first post after delivery

இதனிடையே பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன் விலகியதை அடுத்து, அந்த கேரக்டரில் புதிய மாடலான வினுஷா நடித்து வருகிறார். 

Bharathi Kannamma venba farina first post after delivery

பாரதியை பொருத்தவரை கண்ணம்மாவிடம் இருந்து விவாகரத்து பெற, கோர்ட் வரை சென்று விட்டார். இவர்களின் வழக்கை நீதிபதி விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Bharathi Kannamma venba farina first post after delivery

People looking for online information on Bharathi kannamma promo, Bharathi kannamma today promo, Farina, Venba will find this news story useful.