"கஷ்டம்தான்.. என்ன நடந்ததுனு அவங்களுக்குதான் தெரியும்" தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு பற்றி கஸ்தூரி!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் நேற்று இரவு தங்களின் விவாரகத்து முடிவை அறிவித்தனர். 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அவர்கள் அறிவித்தது, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களுக்கும் ஷாக் ஆகியுள்ளனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து : டிவிட்டர் டிரெண்டிங்கில் ரசிகர்களின் நம்பிக்கை வார்த்தைகள்!
நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிக்கையில், '18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து இருக்கிறோம்' எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது. இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் அப்பா மடியிலேயே தஞ்சம் அடைவது போல் குழந்தை பருவத்தில் ரஜினியுடன் இருக்கம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'அதிகாலையில் சேவலை எழுப்பி'.. யாருங்க அது.. இந்த ஓட்டம் ஓடுறாங்க.. நீங்களே பாருங்க!
தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்ததில் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதி்ல், 'ஒரு நீண்ட கால உறவு முடிவுக்கு வரும்போது அது எப்போதும் வருத்தமாக இருக்கிறது. பொது கண்காணிப்பு என்ற கடுமையான பூதக்கண்ணாடியின் கீழ் அது
நடக்கும்போது அது மிகவும் கடினமாகும். சம்பந்தப்பட்ட இருவருக்கு மட்டுமே அனைத்து விவரங்களும் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது, தெரியவேண்டிய அவசியமும் இல்லை' என பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், 'விவாகரத்து பற்றிய எண்ணங்கள்: பெற்றோருக்கு எவ்வளவு சரியானதாக இருந்தாலும், குழந்தைகளுக்கு அது எப்போதும் தவறாகும். எங்கள் மூத்தவர்கள் சரியாகச் சொன்னார்கள். குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக இருக்க வேண்டும். இது உண்மையான ஒன்று. குழந்தைகள் வந்துவிட்டால், குடும்பத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Siddharth Apologises To Saina Nehwal Kasthuri Responds
- Kasthuri Recreates 20-year-old Picture; Proves She Hasn't Aged A Bit
- Actress Kasthuri Shares A THROWBACK Image For This Telugu Star's Birthday - Guess The Movie
- Kasthuri Viral Photo Shoot Based On Ilaiyaraja Paintings
- Actress Kasthuri Praises Udhayanithi For His Heartfelt Activity
- Kasthuri Speaks About Chennai School Harassment Issue
- Tamil Industry Losing Happiness Actress Kasthuri Emotional Tweet
- Mind Is Unwell And Fearing Actress Kasthuri Emotional Video
- Popular Actress Slams Balaji, Says Would Have Killed Him For This Reason Ft Kasthuri Shankar
- Kasthuri Breaks Bigg Boss Tamil 4 Secrets Ft Archana, Suresh, Sanam Shetty, Shivani
- நடிகை கஸ்தூரி பளீச் பதில் | Actress Kasthuri Opens On Sexual Harrassement Over Anurag Kashyap Issue
- வனிதா விஜயகுமார் விவகாரத்தில் கஸ்தூரி அதிரடி | Actress Kasthuri And Producer Ravindar Blasts On Vanitha Vijaykumar - Peter Paul Issue
தொடர்புடைய இணைப்புகள்
- முரட்டு வில்லன் Look-ல SANTHANAM 🔥 அண்ணா Adipoli Look-uh 💥
- Tough கொடுக்கும் Surekha Vani... மகளுடன் செம Dance | Supritha Birthday Party Video
- "சீமானுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல"- வாக்குவாதமான நேர்காணல் | கஸ்தூரி Vs ரஜினி FAN காரசார
- 😱REVEALED: இத கூடவா Discuss பண்ணுவீங்க? -Surekha Vani About Proposals ❤️ Fun Interview With Daughter
- Arnab Live-ல் Kasthuri பொங்கல் சாப்பிட்ட Video வைரல், Netizens நக்கல்!!
- Video: Lakshmy Ramakrishnan-ஐ தகாத வார்த்தைகளால் பேசிய Vanitha! நடந்தது என்ன? | Peter Paul
- "Sh**t Sh**t!"இப்படி ஒரு புருஷன் தேவையா? Lakshmy Ramki Peter Paul Wife-க்கு கொடுத்த தீர்வு என்ன?
- "Peter Paul பெண்கள் சகவாசம் ஆதாரம் இருக்கு!" தோலுரிக்கும் Kasturi | Vanitha Controversy Interview
- 18+: "உன் ஆண்குறில வலி வந்தா உனக்கு தெரியும்!" கிழித்து தொங்கவிட்ட Kasturi பேட்டி | கறுப்பர் கூட்டம்
- பாவி! "ஒண்ணுக்கு ஒதுங்கிய பொண்ண கரிக்கட்டையா.."- கலங்கிய Kasturi-ன் ஆவேசப் பேச்சு - Emotional Video
- 'எனக்கு Vanitha பேர சொல்ல கூட பிடிக்கல!' Kasturi's 1st பதிலடி பேட்டி On Controversy
- "உருவத்துல மட்டும் தான் நீங்க ஆம்பள.."- கொம்பன் போலீசை கிழித்த Kasturi பளார் பேட்டி